கூட்டுறவு கடன் பயிர் கடன் தள்ளுபடி முக்கிய கோரிக்கைகள்

விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்திற்கும் கூட்டுறவு வங்கி கடன் சலுகைகளை வழங்குகிறது அவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு ஒவ்வொரு தேர்தல் சமயங்களிலும் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் அவ்வாறு அறிவிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய வகையில் ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளியிடப்படும்

அவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றும் வகையில் அறிவிப்புக்கள் வெளியிடும் பட்சத்தில் விவசாயிகள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளை முன்னிறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது

விவசாயிகள் மிகப்பெரும் பிரச்னைகள், கடன் தொல்லைகளில் இருக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் இல்லை, இதைபோன்ற பிரச்னைகளால், தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை இருக்கிறது.

இப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றால், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதை விவசாயிகள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் படிப்படியாக பூரண மதுவிலக்கை, கொண்டு வர வேண்டும். இவைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அனைத்து பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயிகள் அதற்கான கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதேபோல் தற்போது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் எதிரே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,

தவெக அரசு உடனடியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும் என கோரி தமிழக விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஏரிகளையும் தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாத்தல், கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அனைத்து உரங்களும் தடையின்றி உரிய பருவகாலங்களில் கிடைக்க நடவடிக்கை எடுத்தல்

உழவு தொழில் செய்யும் விவசாயிகளின் நலன் கருதி 60 வயது கடந்த விவசாயிகளுக்கு ரூ.20,000 ஓய்வூதியம் வழங்குதல்,

அரசு துறைகளில் பணிபுரிந்து பென்ஷன் வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்ற பென்ஷன் சலுகைகளைப் போல் விவசாயிகளுக்கும் 60 வயது கடந்த பின்னர் 20,000 வாங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

உழவுத்தொழில் செய்யும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குதல்,

அனைத்து ஏரி கரைகளிலும் வனப்பகுதிகளிலும் பனை விதை நடவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்தல், வன விலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்,

ஈஸ்வரன் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் பொன்னேரி ஏரிக்கு தடையின்றி செல்ல தடுப்புசுவர் அமைத்தல்,

ஏலகிரிமலை நீர் தடையின்றி வர கால்வாய்களை தூர்வாரி கரைகளை பாதுகாத்தல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதே போல் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகளை சலுகைகளை வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்தது.

Leave a Comment