இன்று முதல் ரேஷன் கடையில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை

தமிழ்நாட்டில் ரேஷன் கடையில் மூலமாக அரிசி கோதுமை உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகவும் சமையல் எண்ணெய் சர்க்கரை துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

அதே போல் குறிப்பிட்ட சில பொருட்களின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யக் கூடிய வகையில் அதற்கான அறிவிப்புகளையும் வெளியிடப்பட்டு ரேஷன் அட்டை அடிப்படையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன

தற்போது வெங்காயம் விலை அதிகரித்து உள்ள காரணத்தால் ரேஷன் கடையில் மூலமாக குறைந்த விலையில் விற்பனை செய்யக் கூடிய வகையில் தமிழக அரசு தரப்பில் முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது எந்தெந்த ரேஷன் கடைக்கு மூலமாக வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது வெளி சந்தை விலையில் ஒப்பிடும் பொழுது ரேஷன் கடைகளில் விற்பனை செய்யக்கூடிய விலை நிலவரம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டு பயன்படலாம்

தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காய விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் அதன் விலை ரூபாய் 80-ஐ கடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூபாய் 35 என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாயவிலை கடைகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் இந்த விற்பனை நடைபெறுகிறது.

இதன் மூலம் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

இதற்கு முன்னரும் பலமுறை தக்காளி வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் விலை உயரக்கூடிய நேரங்களில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு குறைந்த விலையிலும் மானிய விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது அதை தொடர்ந்து தற்பொழுது வெங்காய விலை உயர்வை சமாளிக்க கூடிய வகையில் பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Comment