தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகள் பெற்று வந்த பயிர் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்புகளை தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களையும் செய்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது
கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன் 75000 ரூபாய் கடன் வாங்கி இருந்தால் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
1 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினாலும் அதிகப்பட்சமாக 75000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் 3வது முறையாக பயிர்க்கடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விதி 110ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசினார்
தவெக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றாலும் பதவியேற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25-5-2026 அன்று குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50,000 ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கூட்டுறவு வங்கியில் மூலமாக பயிர் கடன் தள்ளுபடி செய்வதன் அடிப்படையில் விவசாயிகள் கூடுதலாக பயன்பெறும் வகையில் இந்த அதிரடி மாற்றம் மூன்றாவது முறையாக மறுபரிசலனை செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பையும் தமிழக முதலமைச்சர் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது
இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு
குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரை முழு தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி ரூபாய் 75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையையும் ரூபாய் 75,000க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 35,000மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டது.
அதன்மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு 5,932.23 கோடி ரூபாய் அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19-6-2026 அன்று ஆணையிடப்பட்டது.
இதில் 31.7.2026 வரை 5,267 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது.
கடையில் தற்போது மீண்டும் அதிரடியான பயிர் கடன் தள்ளுபடி செய்யக்கூடிய வகையில் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த மாற்றத்தின் அடிப்படையில் கூடுதல் பயனாளர்கள் சலுகை பெரும்பாலையில் மாற்றங்கள் இருக்கும் என்று நம்பப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த சூழ்நிலையில் மாநிலம் முழுவதுமுள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 7-8-2026 அன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய தொகை 4-5 ஆண்டு கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது.
2021ம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 2021 முதல் 2026 வரையான காலத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் நமது அரசுக்கு தற்போது இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28-11-2025ம் தேதியிட்ட கடிதத்தில் அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறையில் வந்துள்ளது.
அதிரடி மாற்றத்தின் மூலமாக கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கூற்று வங்கியில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கூட்டுறவு வங்கியில் கடன் தொகைக்கு ஏற்றவாறு கடன் தள்ளுபடி அறிவிப்பா ஆனது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த வழிகாட்டுதலின்படியும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.
75,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகவும் 75,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 75,000 வரையும் ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படும்.
இதன்மூலம், ரூபாய் 75,000 முதல் ரூபாய் 1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூபாய் 75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இதனால் ஏற்கனவே பெற்ற தள்ளுபடி தொகைக்கு மேலாக ரூபாய் 40,000 வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும். இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தாலும், சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூபாய் 6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் விவசாயிகள் தரப்பில் அனைவருக்கும் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி வருகின்றனர் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளையும் முன்னிறுத்தி வருகின்றனர்.