12-8-2026 ஆடி அமாவாசை தர்ப்பணம் திதி கொடுக்க உகந்த நேரம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாதவை

ஒவ்வொரு முறையும் வருகின்ற அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு படையல் படித்து திதி கொடுக்க முடியாதவர்கள் குறிப்பிட்ட சில அமாவாசை தினங்களில் கடைபிடித்து திதி கொடுத்து தர்ப்பணம் கொடுக்கக்கூடிய பலன்களை பெற முடியும் என்று ஐதீகங்கள் கூறுகின்றன

இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி புதன் கிழமையில் ஆடி அமாவாசை அனுசரிக்கப்படவுள்ளது.

திதி கொடுக்க உகந்த நேரம்:

ஆகஸ்ட் 12-ம்தேதி அமாவாசை திதி அதிகாலை 01:52 மணி தொடங்கி அன்றைய தினம் இரவு இரவு 12:16 மணிக்கு முடிவடைகிறது.

இதனால் உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வீடுகளில் விரதம் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

அமாவாசை விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து ஆடி அமாவாசை தினத்தையும் கடைபிடிப்பர் குறிப்பாக அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று அமாவாசைகளை கடைபிடிப்பதன் மூலமாக அனைத்து பலன்களையும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளயபட்ச அமாவாசை, தை மாதத்தில் வரும் தை அமாவாசை ஆகும்.

இந்த 3 அமாவாசைகளில் வழிபடுவது ஒரு வருடத்திற்கும் வழிபட்டதற்கான ஆதாயம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

வழக்கமாக வரும் அமாவாசைகளில் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கும், தர்ப்பணம் மற்றும் பிற பித்ரு வழிபாடுகளைச் செய்வதற்கும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கான சிராத்தம் போன்ற சடங்குகளைச் செய்வது பாரம்பரியமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பித்ரு காரியங்கள் முடியும் வரை வீட்டில் வழக்கமான பூஜைகளைத் தள்ளிவைப்பது ஐதீகம். அமாவாசை அன்று தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அன்றைய தினம் வீட்டில் வாசலில் கோலம் போடுதல் கூடாது.

Leave a Comment