ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளிலும் கட்டண மாற்றங்கள் பற்றிய விவரங்களையும் அதற்கான புதிய விலை பட்டியல்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிரடியான தடை உத்தரவு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள் பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு 1-9-2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயில், திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட கோயில்களில் 1-9-2026 முதல் செல்போன்கள் கொண்டு செய்ய தடை விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பாதுகாக்கும் வகையில் கோயில்களுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது.
இருப்பினும் சில கோயில்களில் புகைப்படம், விடியோ, செல்ஃபி, ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தர்கள் பதிவு செய்வதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து
செப்டம்பர் 1 முதல் 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் கைப்பேசி கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த நடைமுறை அறநிலையத் துறையில் 52 முதுநிலை திருக்கோயில்களில் 1-9-2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கோவிலிலும் உள்ள வசதிக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டு உள்ளது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களிடம் இருந்து கைப்பேசிகளை பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு கைப்பேசிக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்கான ரசீதும் வழங்கப்பட உள்ளது.
மேலும் கோவில் வளாகத்திற்குள் கைப்பேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவிலுக்கு வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு மையத்தில் கைப்பேசி ஒப்படைக்கும் போது வழங்கப்படும் ஒப்படைப்புச் சீட்டை பத்திரமாக வைத்துத் தரிசனம் முடிந்த பின் தங்களது கைப்பேசிகளைப் பக்தர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்