தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவதற்கான அறிவிப்புகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அது பற்றிய அறிவிப்புகளையும் அதற்கான செய்தி குறிப்புகளையும் வெளியிட்டு வரும் நிலையில்
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் 2வது அல்லது 3வது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும்,
ஆண்டிற்கு 2 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் வரும் 19ம் தேதி நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள் அனைவரும் வேலை நாடுபவர்கள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு என்ன என்பது பற்றிய விவரங்களையும் என்ன வகையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது
கல்வி தகுதிகள்
இதில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வயது வரம்பு
18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 19ம் தேதி காலை 9 மணிக்கு, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.