பிரதமர் வீட்டுவசதி திட்டம் சிறப்பு சலுகைகள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத் திட்டங்களின் வழிமுறைகள்

பிரதமர் வீட்டு வசதி திட்டம் கொடுக்கக்கூடிய சலுகைகள் பயனாளர்கள் தேர்வு செய்யக்கூடிய நடைமுறையில் விண்ணப்பிக்கக்கூடிய ஆவணங்கள் விண்ணப்பிக்கும் முறைகள் மானியமாக கிடைக்கக்கூடிய தொகைகள் சென்ற ஆண்டு வர ஒவ்வொரு ஆண்டுகளும் நடைமுறைக்கு வருகின்ற மாற்றங்கள் இந்த வருடம் இந்த புதிய திட்டத்தின் மூலமாக பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன பழைய பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது யாருக்கெல்லாம் சிறப்பு சலுகைகள் அடிப்படையில் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் பார்க்கலாம்

தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் தகவலின்படி இந்தியாவில் 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 42.3 சதவீதம் பேர் வீடுகளையும், 31.7 சதவீதம் பேர் நிலங்களையும் தனியாகவோ அல்லது கூட்டு உரிமையாளராகவோ கொண்டுள்ளனர்.

பெண்களின் சொத்து உரிமையையும் பொருளாதார ஆற்றலையும் உயர்த்தும் நோக்கில், பிரதமர் வீட்டுவசதி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வீடுகள் கட்டாயமாகப் பெண்களின் பெயரிலோ அல்லது தம்பதியரின் கூட்டுப் பெயரிலோ மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

மேலும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தீன்தயாள் விளிம்புநிலை மக்கள் மேம்பாட்டுத் திட்டம், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் கடனுதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனுடன் நில உரிமையாளர் விவரங்களில் பெண் உரிமையாளர்களின் பங்களிப்பைத் துல்லியமாகப் பதிவு செய்ய, நில உரிமைப் பதிவேடுகளில் ‘பாலினம்’ என்ற தனிப் பத்தியைச் சேர்க்க நில வளத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்திரி தாக்கூர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

2025-26 ஆம் ஆண்டிற்கு ஜூன் 2026 வரை பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மொத்தம் 33.54 லட்சம் வீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

மேலும் 35.54 லட்சம் வீடுகள் (முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் உட்பட) கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் அங்கீகரிக்கப்பட்டு, 6,72,338 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 4.18 கோடி வீடுகள் இலக்காக ஒதுக்கப்பட்டதில் 3.92 கோடி வீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

3.11 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன மேலும் ஒதுக்கப்பட்ட இலக்குகளில் 1.06 கோடி வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பயன்படக்கூடிய பயனாளிகள் பட்டியல் விவரத்தை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் குறிப்பாக யாரெல்லாம் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறுவதற்கான பட்டியல்கள் ஏதேனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதா பெயர் விவரங்கள் எதுவும் குறிப்பிட்டது 2026 ஆம் ஆண்டு எத்தனை நபர்கள் பயன்பெற உள்ளனர் என்பது பற்றி பதிவை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகங்களும் கேள்விகளும் அதிகரித்துள்ளது

இதன் மூலமாக முன்பு இருந்ததை விட புதிய பயனாளிகள் சேர்க்கப்படும் பட்சத்தில் அவர்கள் அனைவரும் இந்த புதிய நிதி ஒதுக்கீட்டின் மூலமாகவும் கூடுதல் வீடுகள் இன்னும் கட்டி முடிக்க உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் புதிய பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களே கள அளவில் முதன்மை அமலாக்க அதிகாரிகளாக உள்ளனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளபடி, வீடுகள் நிறைவடைவதில் ஏற்படும் தாமதத்திற்கான முக்கிய காரணங்களாவன:

பயனாளிகளின் விருப்பமின்மை, நிரந்தர இடம்பெயர்வு, காலமான பயனாளிகளின் வாரிசுரிமை தொடர்பான சர்ச்சைகள், நிலமற்ற பயனாளிகளுக்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் நிலம் ஒதுக்குவதில் ஏற்படும் தாமதம், புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் சில நேரங்களில் பொது/சட்டமன்ற/பஞ்சாயத்து தேர்தல்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் கிடைக்காமை ஆகியவை ஆகும்.

இத்தகவலை கிராமப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment