ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்படும் அதில் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தவிர இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் வெளியிடக்கூடிய வங்கி விடுமுறை நாட்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றார் போல் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது எந்தெந்த மாநிலத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை நாட்கள் எத்தனை தமிழகத்தில் எத்தனை தினங்கள் வங்கிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என்பது பற்றிய முழு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன
ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.
ஆகஸ்ட் 4 கெர் பூஜா என்ற பண்டிகையின் காரணமாக திரிபுராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 8 சிக்கிமில் கொண்டாடப்படும் டெண்டோங் லோ ரம் ஃபாட் எனும் பண்டிகைக்காக அங்குள்ள வங்கிகள் ஆகஸ்ட் 8 அன்று மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்டு 9 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
ஆகஸ்ட் 13 தேசபக்தர்கள் தினத்தை முன்னிட்டு மணிப்பூரில் உள்ள வங்கிகளுக்கு அன்று விடுமுறை.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்டு 16 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
ஆகஸ்ட் 19 மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளுக்காக திரிபுரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 22 இது ஆகஸ்ட் மாதத்தில் வரும் 4-வது சனிக்கிழமை. அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
ஆகஸ்ட் 25 மிலாடி நபி, முதல் ஓணம், முஹம்மது நபியின் பிறந்தநாள் போன்றவற்றுக்காக கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 26 கேரளாவில் ஐத்-இ-மிலாத், பரவாஃபத், திருவோணம் போன்ற பண்டிகைகளுக்காக அங்குள்ள வங்கிகளுக்கு விடுமுறை. ஒரு சில மாநிலங்களில் மிலாடி நபி ஆகஸ்ட் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலுங்கானா, மணிப்பூர், ஜம்மு & ஸ்ரீநகர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், புது தில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
2026 ஆகஸ்ட் 28 ஈத்-இ-மிலாத்-உல்-நபி, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, அய்யன்காளி ஜெயந்தி, ரக்ஷா பந்தன், பாங்-லாப்சோல் போன்ற பண்டிகளுக்காக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர், கேரளா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
2026 ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமைக்காக வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. விடுமுறை தினங்களிலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்தந்த வங்கியின் நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தலாம். குறிப்பாக வங்கி கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது எனவே வங்கிக்கு செல்லக் கூடியவர்கள் குறிப்பாக நகை கடன் செலுத்துவதற்கு இஎம்ஐ செலுத்தக்கூடிய பணிகளுக்காக வங்கிகளுக்கு செல்லும் அனைத்து பொதுமக்களும் உங்களுடைய மாநிலங்களில் அன்றைய தினம் விடுமுறை உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் உங்களுடைய வங்கிப் பணிகளை செய்து முடிப்பதற்கான செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது..