ஆகஸ்ட் 3ம் தேதி தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர பண்டிகை நாட்கள் விழா காலங்கள் மற்றும் தியாகிகளின் நினைவு தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்று வேலை நாளாக ஏதேனும் ஒரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படும் அதேபோல் ஆகஸ்ட் 3ஆம் தேதி தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் வரை அறிவிக்கப்பட்டுள்ளது

தர்மபுரி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி 2026 ஆகஸ்ட் 3ம் தேதி தர்மபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஆகஸ்ட் 3ம் தேதி தர்மபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

அதே போல் வார இறுதி விடுமுறையுடன் இணைந்து ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதன் தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3 திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான ஆடித்திங்கள் 18-ஆம் நாளை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் அல்லது பிற தேர்வுகள் இந்த விடுமுறை அறிவிப்பால் பாதிக்கப்படாது என்றும், அவை முன்கூட்டியே அறிவித்த அட்டவணைப்படியே நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 22 சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment