ஒவ்வொரு மாவட்டங்களிலும் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்கள் பண்டிகைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது
ஆடி மாதம் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் புகழ்பெற்ற கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது இதற்கு முன்பாக ஆடி 18 அன்று குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூரு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு மாவட்டங்களுக்கு உள்ளுறு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன
இதில் முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு உள்ளுருமை அறிவிக்கப்பட்டுள்ளது
ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படும் எந்தெந்த புகழ்பெற்ற திருவிழாக்கள் நடைபெற உள்ளது அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாற்று வேலை நாள் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழாவையொட்டி வரும் 14ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 55ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது.
இவ்விழாவையொட்டி மாவட்டம் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் அல்லது பிற தேர்வுகள் இந்த விடுமுறை அறிவிப்பால் பாதிக்கப்படாது என்றும், அவை முன்கூட்டியே அறிவித்த அட்டவணைப்படியே நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடு செய்திட வரும் 29ம் தேதி சனிக்கிழமை அனை த்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் செயல்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.