ஆடிப்பெருக்கு 2026 ஆடி 18 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு முக்கிய தகவல்

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு செய்யக்கூடிய நபர்கள் அனைவரும் முன்கூட்டியே டோக்கன் வரக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு அதிகப்படியான மக்கள் நிலம் வாங்குவதிலும் அவற்றை பத்திரப்பதிவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்

அன்றைய தினம் பத்திரப்பதிவு செய்வதன் மூலமாக அதிகப்படியான இடங்களை வாங்க முடியும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு எந்த ஒரு செயலை செய்தாலும் அது பன்மடங்கு பெருகக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுவதால் பத்திரப்பதிவு அதிகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் அல்லாமல் அன்றைய தினம் முன்பதிவு டோக்கன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் நடைபெற உள்ளது

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆடிப்பெருக்கு தினத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய சொத்து வாங்குதல், விற்பனை செய்தல், குடும்ப பாகப்பிரிவினை, தானப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

இதனால் சார்பதிவாளர் அலுவலகங்களில் முன்பதிவு டோக்கன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஏமாற்றத்துடனும் மனவேதனையுடனும் திரும்பி செல்லும் நிலை உருவாகிறது.

இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு பதிவுத்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்தைவிட கணிசமான அளவில் கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கவேண்டும்.

அதிகப்படியான கூட்டநெரிசலை சமாளிக்க கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

சர்வர், இணையதள சேவை மற்றும் தொழில்நுட்ப வசதி தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

குடிநீர், இருக்கை, நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே ஆடிப்பெருக்கு நன்னாளில் பொதுமக்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றமடையாத வகையில் பதிவுத்துறை சிறப்பு ஏற்பாடு மேற்கொள்ளவேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எனவே 2026 ஆம் ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு திங்கள் கிழமை 3-8-2026 அன்று வருவதால் பத்திரப்பதிவு செய்வதில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அது சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது அந்த கோரிக்கையை பரிசளித்து அரசு தரப்பினதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Leave a Comment