வங்கி EMI ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் முக்கிய அறிவிப்பு

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தின் அடிப்படையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிகள் மூலமாக கடன் வாங்கி இருப்பவர்கள் இஎம்ஐ செலுத்துபவர்கள் அனைவருக்கும் இந்த ரெப்போ வட்டி விகிதத்தின் மாற்றத்தின் மூலமாக பயன்பெறுவதற்கும் பாதிக்கக்கூடிய வகையிலும் இந்த மாற்றங்கள் செய்யப்படும்

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை.

5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இஎம்ஐ செலுத்துபவர்கள் முன்பு செலுத்திய நடைமுறையை தொடரும் அதேபோல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் எந்த ஒரு மாற்றம் இல்லாமல் நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம்.

இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூடி ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.

அதன்படி ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதாவது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் அவர் கூறியதாவது;

2026-27 நிதியாண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.

முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும் இவ்வாறு அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் சேமிப்பு கணக்கினுடைய வட்டி விகிதங்களும் அதிகரிக்கும் அதே போல் கடன் வாங்கி இருப்பவர்களுடைய வட்டி விகிதம் அதிகரிக்கும் இதன் மூலமாக கடன் பெற்றவர்கள் பாதிக்க செய்பவர் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதே போல் வட்டி விகிதம் குறைக்க பட்டால் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குறைவான வட்டி விகிதம் கிடைக்கும் ஆனால் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி விகிதம் குறையும் இதன் மூலமாக வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மிகவும் பெரு உதவியாக இஎம்ஐ செலுத்துபவர்களுக்கு கடன் தொகை குறைக்கக்கூடிய நடைமுறையும் சலுகைகளையும் பெறுவார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எந்த ஒரு மாற்றமும் இல்லை என்ற ரெப்போ பட்டி வட்டி விகிதம் முன்பு செலுத்தப்பட்டுள்ள நடைமுறையே பின்பற்றப்பட்டு வரும் என்பதால் கடன் பெற்றவர்கள் இஎம்ஐ செலுத்துபவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

Leave a Comment