ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் அரசு தரப்பில் அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல்கள் வெளியிடுவது மட்டுமின்றி ரேசன் கடை விடுமுறைகள் வங்கி விடுமுறை பற்றிய அறிவிப்புகளையும் ஒவ்வொரு மாதங்களும் அறிவிக்கப்படும்
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பண்டிகை நாட்கள் விழா காலங்கள் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர் அவ்வாறு அறிவிக்கக்கூடிய உள்ளூர் விடுமுறை நாட்களுக்கு பதிலாக மற்றொரு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு செயல்படும்
அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேநேரம் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
அதேபோல் தேர்வுகள் ஏதும் நடைபெறும் பட்சத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் அறிவிப்புகளும் மத சார்ந்த உத்தரவுகளும் வெளியிடப்படும்
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் என்ன அதற்கு மாற்று வேலை நாள் எப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் இது பற்றிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளாரா என்பது பற்றிய விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கோட்டை மாரியம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 புதன்கிழமை (5-8-2026) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், ஆகஸ்ட் 8ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் அறிவிக்கப்படும் உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்படும் நடைமுறையை பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.