மதுரையில் மிகவும் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த அறிவிப்பின் அடிப்படையில் அதிகப்படியான மக்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை காண வருவார்கள் என்பதாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
குறிப்பாக ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் தமிழ்நாட்டில் அரசு தரப்பில் வெளியிடப்படும் பொது விடுமுறை நாட்களை தவிர
ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற முக்கிய விழாக்கள் பண்டிகை நாட்களிலும் தியாகிகளின் நினைவு தினங்களில் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை பணி நாளாகவும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
அதேபோல் மதுரையில் குறிப்பாக மதுரை மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 17 ஆகிய இரண்டு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்வான செப்டம்பர் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் செப்டம்பர் 17-9-2026 அன்று அன்று மிக விமரிசையாக நடைபெற உள்ளது.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆன்மீகப் பெருவிழாவைக் காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் மதுரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வருகையையொட்டி நகரில் ஏற்படவுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காகவும் செப்டம்பர் 17-ஆம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தும்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) அன்று மதுரை மாவட்டத்தில் முழு வேலை நாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இந்த சனிக்கிழமையன்று இயங்கும்.
இதற்கிடையில் இந்த விடுமுறை பொது விடுமுறை அல்ல என்பதால் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் போன்ற அத்தியாவசிய அரசுத் துறைகள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் வழக்கம் போல் செயல்படும்.