தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் அந்த குடும்ப அட்டையில் பெயர் இருக்கக்கூடிய உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகை பதிவை புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களும் கூட்டுறவுத் துறை சார்பாகவும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் உங்களுடைய மாவட்டத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ரேஷன் கடைகளுக்கு சென்று தொடர்ந்து ரேசன் பொருட்கள் வாங்க கூடிய நபர்களை தவிர ரேஷன் அட்டையில் பெயர் இருக்கக்கூடிய மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகை பதிவை உறுதி செய்யும் வகையில் சேல்ஸ் ஆப் பாயிண்ட் கருவியில் சிகப்பு நிறத்தில் குறியீட்டு காட்டும் வகையில் கைரேகை பதிவை செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது
மாவட்ட அளவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்ய சிறப்பு முகாம் ஆகஸ்ட் 29 அன்று நடைபெறும்.
இந்த முகாமில் இது வரை ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களில் விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் கண்டிப்பாக தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
இதற்கான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 29 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் நடைபெறும்.
விடுபட்ட உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விரல் ரேகையை பதிவு செய்து 100 சதவீத ekyc பதிவினை பூர்த்தி செய்திட ஒத்துழைப்பு தர வேண்டும் என கூட்டுறவு துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், தகுதிவாய்ந்த அனைத்துப் பயனாளிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிச் சென்று சேர்வதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக வரும் 29/8/2026 சனிக்கிழமை அன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இச்சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது கைவிரல் ரேகைப் பதிவை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் தங்களது கைரேகை பதிவை புதுப்பிப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனர்.
வேலைக்கு செல்பவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்த சிறப்பு முகாம் நடைபெற இருப்பதால் அனைவரும் தங்களது கைரேகை பதிவை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.