தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் மார்ச் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான கூட்டணி கட்சிகளையும் அந்த கட்சியின் சார்பாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் பற்றிய விவரங்களை தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர் அதேபோல் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் உடைய பெயர் பட்டியல் மற்றும் தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் தொகுதிப் பங்கீடுகள் மற்றும் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல்கள் குறித்த எதிர்பார்ப்பும் அரசியல் தளத்தில் அதிகரித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது கட்சி தரப்பில் போட்டியிடுகின்ற தொகுதிகள் மற்றும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் உடைய பெயர்களையும் வெளியிட்டுள்ளனர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், 11 முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்
அமமுக வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் அனுபவம் வாய்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நம்பிக்கை உரியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளது.
தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் விவரம்
மடத்துக்குளம் சண்முகவேலு
சைதாப்பேட்டை செந்தமிழன்
திருப்பத்தூர் – ஞானசேகரன்
பூவிருந்தவல்லி ஏழுமலை
நாங்குநேரியில் இசக்கிமுத்து
ஒட்டப்பிடாரம் சுந்தரராஜன்
பெரியகுளத்தில் கதிர்காமு
திருவையாறு-வேலு கார்த்திகேய்ன்
திருச்சி மேற்கு தொட்டியம் ராஜசேகரன்
மன்னார்குடி காமராஜ்
காரைக்குடி தேர்போகி பாண்டி