தமிழ்நாட்டில் தமிழக அரசு தரப்பில் ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் உள்ளூர் விடுமுறை பட்டியல்கள் வெளியிடப்பட்டு அதன் பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற முக்கிய பண்டிகை விழா காலங்கள் மட்டுமின்றி தியாகங்கள் நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு அந்த உள்ளூர் விடுமுறைக்கு மாற்று வேலை நாளும் அறிவிக்கப்படும்
குறிப்பாக மாவட்டத்திற்கான உள்ளூர் விடுமுறைகள் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு மற்றும் உத்தரவின் அடிப்படையில் அதற்கு மாற்றாக ஏதேனும் ஒரு சனிக்கிழமை பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையை தொடர்ந்து பின்பற்றி உள்ளனர்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
ஆடி அமாவாசை தினத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இதனால் மாவட்டம் முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 12-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பள்ளி கல்லூரிகளில் ஏதேனும் பொது தேர்வுகள் அட்டவணைகள் வெளியிடப்பட்டிருந்தால் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே தேதியில் தொடரும் அவர்களுக்கு இந்த உள்ளவரை பொருந்தாது
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. ஜூன் முதல் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் முதலாம் ஆண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 12.08.2026 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
12.08.2026 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2026 ஆகஸ்ட் திங்கள் நான்காவது சனிக்கிழமை (22.08.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி (நாளை மறுநாள்) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திட்டமிடப்படி ஏதேனும் தேர்வுகள் இருந்தால், அவை அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 12/08/2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதம் என்றாலே பண்டிகை மாதமாக கருதப்படுகிறது அவ்வாறு ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் திருவிழாக்கள் விழா காலங்கள் பண்டிகைகள் நடைபெற்று வருகின்றன அதேபோல் இவற்றைக்கான உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்று வேலை நாளும் நடைமுறையில் இருந்து வருகிறது
அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஆகஸ்ட் 22ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணிகள் பாதிக்காத வகையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தில் தலைமை கருவூலங்கள் மற்றும் கிளைக் கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்களை செயல்படும் எனவும் அறிவிப்புக்களும் அது சார்ந்த உத்தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.