14-8-2026 முதல் விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கக்கூடிய மாவட்டங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன அதேபோல் தற்போது 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நாளையும் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எந்தெந்த மாவட்டங்களுக்கு இந்த உள்ளூரு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு மாற்று வேலை நாள் என்ன யாருக்கெல்லாம் இந்த முறை பொருந்தும் யாருக்கெல்லாம் இந்த உள்ளூர் விடுமுறை கிடையாது என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது

விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இந்த உள்ளருடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு மாற்று வேலை நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு  மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி மாற்று வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா  ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 14 வரை  நடக்கிறது.

ஆகஸ்ட் 14ல் தேரோட்டம் நடக்கிறது இதை முன்னிட்டு அன்று வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் மாத 5 வது சனிக்கிழமை ஆகஸ்ட் 29 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே பொதுத் தேர்வுகள் அல்லது பிற தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த உள்ளூர் விடுமுறை அந்த தேர்வுகளுக்கு பொருந்தாது. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராததால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 14/08/2026 அன்று விருதுநகர் மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழாவையொட்டி வரும் 14ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 55ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நடக்கிறது.

இவ்விழாவையொட்டி மாவட்டம் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் அல்லது பிற தேர்வுகள் இந்த விடுமுறை அறிவிப்பால் பாதிக்கப்படாது என்றும், அவை முன்கூட்டியே அறிவித்த அட்டவணைப்படியே நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை நாளை ஈடு செய்திட வரும் 29ம் தேதி சனிக்கிழமை அனை த்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் செயல்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment