Vellore Gudiyatham Sri Gangai Amman Temple Festival Celebration Local holiday declared Vellore district on 15th May 2023 To compensate for this day, educational institutions and government offices will function on June 24 2023 Saturday
தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் முக்கிய விழாக்கள் பண்டிகை தினங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு நாள் உள்ளிட்டவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது அதே போல் அந்த உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாகவும் அறிவிக்கப்படும்
அவ்வாறு அறிவிக்கப்படும் மாற்று வேலை நாள் ஏதேனும் ஒரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டு வருவதும் குறிப்பாக உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாற்று வேலை நாள் அன்று பணிகளாகவும் இருக்கும்
அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில் திருவிழா காரணமாக மே 15 உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ள பக்தர்களின் வசதிக்காக மே 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்ய ஜூன் 24 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. அன்றைய நாளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பின், அத்தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும்
உள்ளூர் விடுமுறை அன்று கருவூலங்களிலும், சார்நிலை கருவூலங்க ளிலும் அரசு பாது காப்புக்கான அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ந் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 24-6-2023 சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், 25-6-2023 ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.