முதியோர் ஓய்வூதியம் Old Age Pension Allowance Scheme 11 உதவித் தொகை திட்டம்

கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் யாருடைய ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ஓய்வூதியம் வீதம் வழங்கப்படுகிறது

தமிழ்நாடு அரசின் கீழ் கீழ் கண்ட உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

உழவர் பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

ஆதரவற்ற முதிர்கன்னி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

இந்திரா காந்தி தேசிய விதவையர்   ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

இந்திரா காந்தி தேசிய கனவால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை திட்டம்.

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர் இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை வழியாக அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயது சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயது சான்றிதழ் பெறப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்படையாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபிக்கப்படுகிறது.

வசிக்கும் பகுதியை சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகரமன்றத் தலைவர், மாநகர மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

Leave a comment