திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா ஆழித்தேரோட்டம் 2025, தேதி நேரம் திருவாரூர் ஆழி தேர், ஆசியாவின் மிகப்பெரிய தேர், திருவாரூர் தேர் திருவிழா 2025, April 7 Thiruvarur Aali Ther Thiruvizha, Aali Therottam in Tirupattur 2025 Date Time Festival Program Function Event
ஏப்ரல் 7ம் தேதி காலை ஆழித்தேரோட்டம் நடக்கிறது
ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது.
கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடைபெற்றது.
கடந்த 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சுவாமிகளின் வீதியுலா
22 முதல் 24ம் தேதி வரை நந்திகேஸ்வரர், சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளின் வீதியுலா தியாகராஜ சுவாமி கோயில்
காலபைரவர் வீதியுலா கொடுத்தநாயனார் சுவாமி வீதியுலா நடந்தது. 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை சந்திரசேகர சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஏப்ரல் 1ம் தேதி தியாகராஜ சுவாமிக்கு வசந்த பெருவிழா மற்றும் என்திசை கொடியேற்ற திருவிழா நடக்கிறது.
6ம் தேதி இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி ஆழித்தேரில் எழுந்தளும் நிகழ்ச்சி நடக்கிறது.
7ம் தேதி காலை ஆழித்தேரோட்டம் நடக்கிறது.இதையொட்டி பிரமாண்ட தேர் அலங்கரிக்கும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த ஆழித்தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த 96 அடியில் 36 அடியானது மரத்தினால் ஆன தேர்ப் பீடமாகும். மற்ற 60 அடி மூங்கில் போன்றவற்றால் இத்தேர்பீடத்தின் மீது எழுப்பப்படும் கோபுரமாகும்.
திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் போது
திருவாரூரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரூரானுக்கு அரோகரா என்று வானும் மண்ணும் அதிரும் வகையில் பக்தி முழக்கத்துடன் வடம் பிடிப்பர்
திருவாரூர் தியாகராஜர் கோயில் திருத்தலம் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாக விளங்கி வருகிறது. கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழாக்களில் பங்குனி உத்திர பெருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டமும், கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறும்.