5-5-2023 தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு May 5 Local Holiday in Madurai, Theni District

May 5th Local holiday declared Madurai and Theni Distict Lord Kallazhagar’s entry into Vaigai river as part of Chithirai festival. The district treasury and sub-treasuries, banks and other essential and emergency services would function with limited staff on the day.

Theni Mangala Devi Kannagi Kovil Chitra Pournami Festival Celebration Local holiday declared Theni district on 5th May 2023 To compensate for this day, educational institutions and government offices will function on May 20

தமிழக முழுவதும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர பண்டிகை நாட்கள் தியாகிகளின் நினைவு நாட்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் அதேபோல் அந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படும்.

கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில், தமிழக-கேரள மாநில எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் இருமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டிற்கான திருவிழா மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இந்த திருவிழா நடைபெறும் நாளில் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா மே 5-ந்தேதி நடக்கிறது. அன்றைய நாளில் தேனி மாவட்டத்தில் வேலை நாளாக உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், அரசு சார்ந்த துறைகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மே 20-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 12-ந்தேதி தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். அதை ஈடுசெய்யும் வகையில் மே 27-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான மே 5-ந் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மே 5-ந் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

Leave a comment