2025 மார்ச் 4ஆம் தேதி தென்காசி விழுப்புரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

தமிழக அரசு அறிவிக்கும் பொது விடுமுறை நாட்களைத் தவிர பண்டிகை நாட்கள் தியாகிகளின் நினைவு நாள் முக்கிய விழாக்கள் நடைபெறும் மாவட்டங்களுக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாற்றாக அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.

சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி (4/3/2025) செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு அன்றைய தினம் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது.மேலும் இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15/3/2025) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இன்றைய தினம் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment